கடற்படை மகளிர் பேஸ்போல் அணி வெற்றி!

இலங்கை கடற்படை மகளிர் பேஸ்போல் அணி (Baseball) வெளிநாட்டில் பங்கு பற்றி முதற் தடவையாக வெற்றி பெற்றுள்ளது.
பாங்கொங் அமெச்சர் பேஸ்போல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உள்ளுர் விளையாட்டு வரலாற்றில் கடற்படை மகளிர் பேஸ்போல் அணி சாதனை படைத்துள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவிக்கின்றது.
இறுதிப் போட்டிற்கு முன்னதாக நடை பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் குறித்த அணியினர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இறுதிப்போட்டியில் இலங்கை கடற்படை மகளிர் அணியினர் கசிட்சார்ட் பல்கலைக்கழக அணியினருடன் போட்டியிட்டு 8 க்கு 7 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டனர்.
Related posts:
உலக கிரிக்கெட் அரங்கில் கணிக்க முடியாத அணி வங்கதேசம்- மேத்யூ ஹெய்டன் !
இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் : நியூஸிலாந்து வெற்றி!
கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே அதிரடி அறிவிப்பு!
|
|