கடற்கரை கரப்பந்தாட்டம் – கிண்ணத்தை வென்றது யாழ். மாவட்டச் செயலகம் !

Tuesday, May 22nd, 2018

வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாவட்டச் செயலக அணிகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி கிண்ணம் வென்றது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி மோதியது. மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலிரு செற்களையும் முறையே 21:13, 21:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்றது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக அணி.

Related posts: