கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!
Saturday, January 14th, 2017இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் முன்னாள் தலைவரான கங்குலியின் தாயாருக்கும் சமீபத்தில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் மேற்கு வங்கத்தில் Vidyasagar University க்கு தன்னுடைய மகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளான். அவன் அங்கு வந்தால் மீண்டும் உயிருடன் திரும்ப மாட்டார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கங்குலி பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் Midnapore மாவட்டத்தின் Arabinda Nagar பகுதியைச் சேர்ந்த Nirmalya Samanta என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு காரணம் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியான Ashish Chakraborty தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் Nirmalya Samanta ஒரு செய்தித் தாள் விற்பனையாளர் என்று கூறப்படுகிறது.
Related posts:
கூடைப்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் மகுடம்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி!
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!
|
|