கங்காருகளை துவசம் செய்த இலங்கை சிங்கங்கள்!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிக்ளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியுடன் சமநிலை பெற்றுள்ளன பகல் -இரவு ஆட்டமாக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குஷால் மெண்டிஸ், அஞ்சேலோ மத்தியூஸ், குஷால் பெரேரா ஆகியோர் அரைச்சதம் கடந்தனர்.
தொடர்ச்சியான 5 ஒருநாள் போட்டிகளில் அரைச்சதம் கடந்த தினேஸ் சந்திமால் இன்றைய போட்டியில் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜேம்ஸ் பால்க்னர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 46 வது ஓவரின் இறுதி பந்திலும் 48 வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்த சாதனைப் படைத்தார்.
இந்நிலையில், 289 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அபோன்சோ 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் நாயகன் விருதை இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி தம்புள்ள மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|