ஓராண்டாக வீட்டுக்கு செல்லவில்லை – நட்சத்திர வீரர் ரஷீத் கான் உருக்கம்!

Wednesday, June 6th, 2018

ஆப்கானிஸ்தானில் நடக்கும் தொடர் குண்டுவெடிப்பு குறித்து நம்பர் 1 டி20 பவுலரான ஆப்கான் கிரிக்கெட் அணியின் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் என் வீட்டுக்கு ஓராண்டாகச் செல்லவில்லைஇ என்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரிதும் இழக்கிறேன்.

ஆப்கானில் குண்டுவெடிப்புகள் என்று செய்திகள் என் காதுகளைத் துளைக்கின்றன. ஐபிஎல் ஆட்டத்தின் போது கூட என் ஊரில் குண்டு வெடிப்புஇ எனக்கு கடும் ஏமாற்றமாக இருந்ததுஇ அதில் என் நெருங்கிய நண்பரை இழந்தேன்.

என்னுடைய இன்னொரு நண்பர் அந்தப் போட்டிக்குப் பிறகு என்னிடம் தொடர்பு கொண்டு ஏன் சிரித்த முகத்துடன் இருக்கும் நீ அவ்வாறு இல்லை என்று வினவினார்.

ஆகவே இந்தச் சம்பவங்கள் என்னைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆனாலும் என் மனத்தை சரியான நிலையில் நிறுத்துகிறேன். என் ஆட்டத்தின் மூலம் என் நாட்டு ரசிகர்கள் இந்த பயங்கரக் காலக்கட்டத்திலும் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதற்காகத்தான் ஆடுகிறேன்.

இவ்வளவு குறுகிய காலத்தில் என் வாழ்க்கையில் சாதனைகளை நிகழ்த்துவேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இது கனவு போன்றதுதான் என கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதரபாத் அணிக்காக விளையாடினார். சுழற்பந்து வீச்சாளரான அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை அள்ளினார்.

ரன்கள் குறைவாக கொடுப்பது டி20 போட்டிகளில் முக்கியம் என்பதால்இ அவர் இந்த விஷயத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டார்

Related posts: