ஓய்வை எதிர்பார்ப்பது இவர்கள் மட்டும் தான் – ரவி சாஸ்திரி!
Monday, November 13th, 2017
பொறாமை எண்ணம் கொண்டவர்களே டோனியின் ஓய்வை எதிர்பார்க்கிறார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில், டோனியை சுற்றி பொறாமை கொண்டவர்கள் பலர் உள்ளனர்.அவர்கள் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவை விரும்புவதோடு, அவரின் முடிவை காண காத்துள்ளனர்.
ஆனால், டோனி போன்ற சிறந்த வீரர்கள் தமது எதிர்காலத்தை தாமே முடிவு செய்கின்றனர்.டோனியின் மதிப்பு இந்திய அணிக்கு நன்றாகவே தெரியும், அவர் மீதான விமர்சனங்கள் இந்திய வீரர்களின் எண்ணங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.டோனி மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
Related posts:
தென்னாபிரிக்க அணி முன்னிலை!
உடற் தகுதியில் தேறிய சுரேஷ் ரெய்னா மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக்கிடைக்குமா?
டு பிளசிஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை – ஐசிசி!
|
|