ஓய்வை அறிவித்தார் திசர பெரேரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Tuesday, May 4th, 2021

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் திசர பெரேரா தனது 32 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ரன்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி 20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் பல இக்கட்டான நிலமைகளில் போராடி வெற்றிகளை பதிவு செய்தவர். இவரின் அறிவிப்பு இலங்கை அணிக்கு பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: