ஓய்வை அறிவித்தார் டேல் ஸ்டேயின்!

Tuesday, August 6th, 2019

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேநேரம் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 க்கு 20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

36 வயதான டேல் ஸ்ட்டெயின் இதுவரையில் 93 சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 439 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்தநிலையில் தனது ஓய்வு குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது, டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்று வீரர் ஒருவரை உடல், உள, உணர்ச்சி சோதனைக்குட்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் தான் ஓய்வுக்கு பின்னர் எந்தவொரு டெஸ்ட்டிலும் பங்கபற்ற முடியாது எனும் போது மிகவும் வருத்தமளிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

எனினும் தமது உடற்தகைமைகளை கருத்திற்கொண்டு ஒருநாள் சர்வதேச போட்டி மற்றும் 20க்கு 20 போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: