ஓய்வு பெற்ற பின் ரொனால்டோ என்ன செய்வார்?

Tuesday, October 4th, 2016

போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது நாட்டில் சொந்தமாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

கிரிஸ்டினாயோ ரொனால்டோ, கால்பந்து உலகில் இந்த பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்கான தற்பொழுது விளையாடி வருகிறார்.

2016 ஐரோப்பிய கோப்பையை போர்த்துக்கல் அணி தனதாக்கி கொண்டதன் பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தனது சொந்த நாட்டில் லிஸ்பன் நகரில் தனது இரண்டாவது 7 நட்சத்திர விடுதி ஒன்றை தொடங்கியுள்ளார்.

81 அறைகள் கொண்ட இந்த சொகுசு ஹோட்டலை பெஸ்ச்டானா என்ற நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளார். இந்த சொகுசு ஹோட்டலின் மதிப்பு 54 மில்லியன் யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உலகம் முழுவதும் தொடர் நட்சத்திர ஹோட்டல்களை தொடங்க வேண்டும் என்பதே தனது நீண்ட கால ஆசை என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.  31 வயதான ரொனால்டோ இது குறித்து கூறும்போது, கால்பந்து போட்டிகளிலிருந்து ஓவ்வு பெற்ற பிறகு செய்ய வேண்டியவைகளை இப்போதே திட்டமிட வேண்டும் என்று தெரிவித்தார்.

b2589067bea7c1bd90f42789b1591541

Related posts: