ஓய்வு பெறுகிறாரா மாலிங்க?

Thursday, August 31st, 2017

இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள எதிர்வரும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க செயற்படவுள்ளார்.

300 விக்கட்டுக்களை வீழ்த்த மாலிங்க இன்றும் ஒரு விக்கட்டை மாத்திரமே பெறவேண்டியுள்ளது. இந்த , இலக்கை கடந்த பிறகு லசித் மாலிங்க ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கிரிக்கட் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் , அவ்வாறான எந்த தீர்மானங்களையும் மாலிங்க மேற்கொள்ளவில்லை என மாலிங்கவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது.அதேபோல் , தனக்கு முடிந்தளவு காலம் நாட்டுக்காக விளையாட தயாராக உள்ளதாக மலிங்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: