ஓய்வுபெற்றார் ராம்நரேஷ் சர்வான்!

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவர் ராம்நரேஷ் சர்வான், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
36 வயதான சர்வான், மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக 87 டெஸ்ட் போட்டிகளில் 15 சதங்கள் உள்ளடங்கலாக 40.01 என்ற சராசரியில் 5,842 ஓட்டங்களையும் 181 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 சதங்கள் உள்ளடங்கலாக 42.67 என்ற சராசரியில் 5,804 ஓட்டங்களையும் பெற்றதோடு, 18 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2 அரைச்சதங்களையும் பெற்றார்.
இவற்றுக்கு மேலதிகமாக, 4 டெஸ்ட் போட்டிகள் உட்பட, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை தாங்கியிருந்தார்.
இறுதியாக, 2013ஆம் ஆண்டிலேயே சர்வதேசப் போட்டி ஒன்றில் விளையாடிய அவர், அதன் பின்னர் தேர்வாளர்களால் கருத்திலெடுக்கப்படாது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|