39 ஓட்டங்களினால் டெல்லி அணி வெற்றி!

Monday, April 15th, 2019

இந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து, 155 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிரல்ஸ் அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்ன சுப்பர் கிங்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் 8 புள்ளிகளுடன், முறையே 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் உள்ளன

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 6 புள்ளிகளுடனும், இராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4 புள்ளிகளுடனும், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 2 புள்ளிகளுடனும் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளது.