ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய சில தகவல்கள்!
Saturday, August 20th, 2016
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க உங்களுக்கு எத்தனை வயது ஆகியிருக்க வேண்டும்? குதிரைகள் எவ்வாறு குதிரைச்சவாரி நிகழ்வுகளில் பங்கேற்கின்றன?ஒலிம்பிக்ஸ் குறித்து நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் உள்ளன.
பிற தடகள வீரர்களைப் போல, குதிரைகளும் விமானத்தில் பயணித்து வந்து சேருகின்றன. விமானத்தில் உயர் வகுப்புக்கு இணையான வசதியான முறையில், ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு குதிரைகள் வந்து சேர்ந்தன. விமானத்தில் குதிரைகளுக்கான ஓர் அடைப்பில் இரண்டு குதிரைகள் பயணித்தன. ஆனால் ஓர் அடைப்பில் மூன்று குதிரைகள் பயணிக்க முடியும். தரையில், குதிரைகள் தொழுவ அடைப்பிற்குள் அனுப்பட்டு பின் விமானத்தில் ஏற்றப்படுகின்றன.
அந்த குதிரைகள் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். அது அவ்வளவு வசதியாக இல்லாவிட்டாலும், அவை நிற்கும் போதே தூங்க முடியும். விமானத்தில் குதிரைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் கொடுக்கப்படும். வான் வழி பயணத்தின் போது, ஆபத்துக்கள் இல்லாமல் இல்லை. குதிரைகளுக்கு, பயணத்தின் போது வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றனவா என கால்நடை மருத்துவர்களும் கால்நடை பராமரிப்பாளர்களும் கண்காணிப்பார்கள்.
வாலிபால் வீராங்கனைகள், ஆண் போட்டியாளர்களை விட குறைவான அளவில் ஆடைகளை அணிய வேண்டுமா?இல்லை. ஆனால் சீருடை வழிகாட்டுதல்கள் சமீபத்தில்தான் மாற்றப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டு வரை, ஒலிம்பிக்கில் வாலிபால் வீராங்கனைகள் பிகினி அல்லது நீச்சல் உடையை அணியவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு, இந்த சீருடைகளை, போட்டியாளர்களின் உடல்கள் மீது கவனம் செலுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற எந்தவித தொழில்நுட்ப , நடைமுறை அல்லது செயல்திறன் அதிகரிக்கும் காரணங்கள் எதுவும் இல்லை,” என்று ஆஸ்திரேலியாவின் விளையாட்டு ஆணையம் குற்றம் சுமத்தியது. 2012-ல் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டன. அப்போதிருந்து, பெண்கள் ஷாட்ஸ் எனப்படும் கால் சட்டை, முழுக்கை சட்டைகள், முழு உடல் ஆடைகள் ஆகியவை அணியலாம். ஆண்கள் ஷாட்ஸ் மற்றும் உடலை ஒட்டிய பனியன்களை அணியலாம்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு உண்டா?
ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் இளம் வீரராக, நேபாளத்தைச் சேர்ந்த 13 வயது கௌரிகா சிங் பங்கேற்றார். மூத்த வீரராக, நியூசிலாந்தை சேர்ந்த 62 வயதான ஜூலி ப்ரோஹம் பங்கேற்றார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதிகளின்படி, வயது வரம்பு இல்லை. ஆனால், அந்தந்த நாட்டு விளையாட்டு சம்மேளனங்கள் வயது வரம்பை முடிவு செய்யலாம்.அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில், ஆக்ரோபாடிக் எனப்படும் சாகஸ ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 15 ஆகும். சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு இந்த குறைந்த பட்ச வயது என்பது தடகள வீரர்களை பாதுகாப்பதற்கானது என்று தெரிவித்துள்ளது.
இளம் ஒலிம்பிக் பத்தக வீரர் கிரேக்க நாட்டு ஜிம்னாஸ்டிக் வீரர் டிமிட்ரியஸ் லோவ்ண்ட்ராஸ் 1896ல் நடந்த ஏதென்ஸ் விளையாட்டில் பங்கேற்றார். ஓர் அணியில் பங்கேற்று, வெண்கலப் பதக்கத்தை வென்றபோது அவருக்கு 10 வயது மற்றும் 218 நாட்கள்.
ஒலிம்பிக் பதக்கங்கள் தங்கத்தால் செய்யப்பட்டவையா?
ஒவ்வொரு தங்கப் பதக்கமும், 24 காரட்டில் குறைந்தபட்சம் 6 கிராம் தங்கத்தை கொண்டிருக்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது. இந்த ஆண்டின் பதக்கம் 1.34 சதவீதம் தங்கம் மற்றும் 92.5 சதவீதம் வெள்ளியால் ஆனது. பெரும்பாலானவை மறுசூழற்சி செய்யப்பட்டவை. இதனிடையே, இந்த ஆண்டின் 30 சதம் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மறுசுழற்சி செய்யப்பட்ட வெள்ளி மற்றும் தாமிரமும் அடங்கும்.
பிரேசிலிய நிறுவனத்தால் தயாரிக்கபட்ட பதக்கங்கள் 500 கிராம் எடை கொண்டவை. திட தங்கத்தால் ஆன பதக்கங்கள், 1912ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகள் வரை பயன்படுத்தப்பட்டன.
Related posts:
|
|