ஒலிம்பிக் விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் – சர்வதேச கிரிக்கெட் பேரவை!

icc-dave-richardson Friday, April 21st, 2017

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை .நடவடிக்கை எடுத்து வருகின்றது.  2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் றிச்சர்ட்சன் தெரிவித்தவை வருமாறு.

‘‘ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டியுள்ளது. அப்போதுதான் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியான செப்டெம்பர் மாதத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் விண்ணப்பிக்கக்கூடியதாக இருக்கும்.  அதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டை இணைப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஆராயும்.

‘‘ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் விளையாட்டை  இணைப்பதற்கு இது சரியான நேரம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் கருதுவதுடன் குறிப்பாக நானும் அவ்வாறே கருதுகின்றேன்.

உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் விளையாட்டை பிரபல்யமடையச் செய்வதற்கு இதுதான் சரியான முடிவு என அங்கத்துவ நாடுகள் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளன’’ என்றும் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் 1900 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பெரிய பிரித்தானியாவும் பிரான்ஸும் மாத்திரமே கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றியிருந்தன.இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்று வருவதாலும் சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்குள் ஒரு முடிவை தருவதாலும் இவ் விளையாட்டை 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இணைப்பதற்கான விண்ணப்பத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை எதிர்வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு லொஸ் ஏஞ்சலிஸ், ரோம், பாரிஸ், புடாபெஸ்ட், ஹம்பேர்க் ஆகிய ஐந்து நகரங்கள் மனு செய்துள்ளன. இவற்றில் எந்த நகரம் 2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியானது என்பது குறித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுச்சபை வாக்களிப்பின் போது சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவிக்கவுள்ளது.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…