ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்!

Saturday, May 29th, 2021

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.

இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மில்கா கெஹானி தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: