ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்கப்படுமா?
Sunday, May 29th, 2016பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை சிக்கா நோய் பரவல் காரணமாக ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரியோ டி ஜெனெரோவிலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இணைந்து கடிதம் ஒன்றை உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்திற்கு முன்வைத்துள்ளனர்.
பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த மருத்துவ நிபுணர்கள் சிக்கா வைரஸ் மூலம் உலக பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கும்படியும் அவர்கள் உலக சுகாதார நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், உலக சுகாதார நிறுவனம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. பாரதூரமான அபாயம் எவையும் நிலவவில்லை எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
|
|