ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைக்க நடவடிக்கை!

Friday, March 22nd, 2019

தமது வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்துக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளமையானது, கிரிக்கட் போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளில் உள்ளடக்குவதற்கான கதவை திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகத்தின் உறுப்பினர்கள், இந்திய கிரிக்கட் வீரர்களை சோதனைக்கு உட்படுத்த இதுவரையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அனுமதித்ததில்லை.

இதுவும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைப்பதற்கான முக்கிய தடையாக இருந்துவந்தது.

எனினும் கடந்த தினம் இதற்கான அனுமதியை வழங்க இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் போட்டிகளை இணைப்பதற்கான வாய்ப்பு அண்மித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: