ஒலிம்பிக் ஆரம்பமே இந்தியர்களுக்கு அதிர்ச்சி!

Sunday, August 7th, 2016

ஒலிம்பிக் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரார்த்தனா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

டென்னிஸ் இரட்டையர் பிரவில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா, பிரார்த்தான தாம்ரே ஜோடி, சீனாவின் பெங், ஜாங் ஜோடியை சந்தித்தது.இதில் இந்தியா ஜோடி 6-7, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் சீனா ஜோடியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இதே போல், ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் லியாண்டர் பயஸ், போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.டென்னிசில் இந்தியா பதக்கம் வெல்ல இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றிப்பெற்றால் மட்டுமே ஒலிம்பிக் டென்னிசில் இந்தியாவின் பதக்க கனவு நிறைவேறும்.

Related posts: