ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகள் தோல்வி!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மக்ளிர் இரட்டையருக்கான டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுலேயே அமெரிக்காவின் வில்லியம் சகோதரிகள் வெளியேறியுள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையருக்கான போட்டியில் அமெரிக்காவின் வில்லியம் சகோதரிகள், செக் குடியரசின் லூசி சபரோவா மற்றும் பர்போரா ஆகியோரிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளனர்.
ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆவேசத்துடன் ஆடிய செக் குடியரசு இணை முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து ஆடிய வில்லியம் சகோதரிகள் அடுத்த செட்டிலும் கோட்டை விட்டனர். இரண்டாவது செட்டை செக் குடியரசு இணை 6-4 என்ற புள்ளிகளில் கைப்பற்றியது.இதனால் வில்லியம் சகோதரிகள் இரட்டையர் பிரிவில் இருந்து வெளியேற வேண்டிய நிலையை எட்டினர்.
கடந்த 2000, 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்ற வில்லியம் சகோதரிகளான வீனஸ் மற்றூம் செரீனா ஆகியோர் இந்த முறை துவக்கத்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
Related posts:
|
|