ஒலிம்பிக்கில் முதன்முறையாக அகதிகள் அணி!

Sunday, June 5th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5-ம் திகதி பிரேசிலில் 31-வது கோடை கால ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அகதிகள் அணி பங்கேற்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அணியில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியின் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் கொடியின் கீழ் இவர்கள் பங்கேற்பார்கள். தெற்குசூடான், சிரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சர்வசேத ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் பேசுகையில், 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படும் வீரர்களுக்கு இணையாக, அகதி வீரர்கள் அடங்கிய அணியும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரே மாதிரியாக நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

Related posts: