ஒலிம்பிக்கில் கிரிக்கெட் வேண்டும்: ஆசையை வெளிப்படுத்தும் சங்கா!

Sangakkara Friday, January 12th, 2018

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட் விளையாட்டை சேர்ப்பதற்கான முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு குமார் சங்ககார உள்ளிட்ட மெல்போன் கிரிக்கட் கழகம் இந்திய கிரிக்கட்கட்டுப்பாட்டு சபையிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த கழகம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கூடியது. இந்த கோரிக்கையை பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதேமுன்வைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் தமது கிரிக்கட்டை இணைக்க விரும்பவில்லை என செல்வந்த மற்றும் பலமான கிரிக்கட் சபையான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைதெரிவித்துள்ளது.

அவ்வாறு இணைக்கப்படின் இந்திய கிரிக்கட் அதிகாரிகளின் அதிகாரம் சரிந்து அந்நாட்டு தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு பொறுப்பு கூற வேண்டிய நிலை ஏற்படும் என கிரிக்கட்விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.