ஒரே போட்டியில் 24 சிக்ஸர்கள்: உலக சாதனை படைத்தது இங்கிலாந்து!

Friday, March 1st, 2019

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 24 சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.

மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து மோதிய நான்காவது ஒருநாள் போட்டி செயிண்ட் ஜார்ஜில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 418 ஓட்டங்கள் எடுத்தது,

அணித்தலைவர் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர், மொத்தம் 24 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இதுதான்.

Related posts: