ஒரே ஓவரில் 5 இலக்கு: மிதுன் சாதனை!

Saturday, November 30th, 2019

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா – கர்நாடகா அணிகள் மோதின.

அரியானா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதனால் எளிதாக 200 ஓட்டங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை அபிமன்யு மிதுன் அபாரமாக வீச இரண்டு ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதற்கு இலங்கை வீரர் லசித் மலிங்க நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் சாதனைப் படைத்திருந்தார்.

மிதுன் 5 வது பந்தை வைடாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ஒரு ஓட்டம் விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

முதல் 3 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 37 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: