ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை – திசர பெரேரா அபாரம்!

Monday, March 29th, 2021

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் திசர பெரேரா ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

இலங்கையர் ஒருவர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் 50 ஓவர் போட்டித் தொடரில் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

திசர பெரேரா இலங்கை இராணுவ கழகத்தின் சார்பில் நேற்றயைதினம் ஆறு சிக்ஸர்களை அடித்தார்.

ப்ளும்பீல்ட் கழகத்தின் பந்து வீச்சாளர் திலான் குரேயின் ஓவருக்கு திசர பெரேரா ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார்.

13 பந்துகளில் திசர அரைச் சதம் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார். இது இலங்கையர் ஒருவர் உள்நாட்டுப் போட்டியில் பெற்றுக் கொண்ட இரண்டாவது மிக வேகமாக அரைச் சததமாகும். இதற்கு முன்னதாக கௌசல்ய வீரரட்ன 12 பந்துகளில் அரைச்சதம் பெற்றுக் கொண்டிருந்தார்.

உலக அளவில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை பெற்றுக் கொண்ட ஒன்பதாவது வீரராக திசர சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

சேர் காபில் சோபர்ஸ், ரவி சாஸ்திரி, ஹேர்ஸல் கிப்ஸ், யுவராஜ் சிங், கெரோன் பொல்லார்ட் உள்ளிட்ட எட்டு வீரர்கள் இந்த சாதனையை சர்வதேச மற்றும் உள்ளுர் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளனர்.

Related posts: