ஒரே ஓவரில் ஆறு இலக்குகள் –  அவுஸ்திரேலிய வீரர் சாதனை!

Friday, January 27th, 2017
‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் கழகத்தின் வீரர் அலட் கேரே ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை.

ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார்.

ஒன்பதாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் முறையே ஸ்லிப்பில் நின்றவரிடமும் விக்கட் காப்பாளரிடமும் பிடி கொடுத்து எதிரணியினர் சரணடைய, மூன்றாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஒருவர் ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளும் நேரே விக்கட்டுகளைத் தாக்க, மொத்தமாக இரண்டு ஹாட் ட்ரிக்குகளுடன் வரலாற்றுச் சாதனை படைத்தார் கேரே!

போட்டியில் 40 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது பல்லரே.போட்டியின் பின் பேசிய அலட், “என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. ஆனால் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

6_6_Wickets

Related posts: