ஒரு நாள் அரங்கில் அதிக வெற்றிகள் பெற்ற அணி எது? இலங்கை அணி எத்தனை வெற்றிகள் பெற்றுள்ளது?
Thursday, October 20th, 2016
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகள் விளையாடிய அணிகளில் இலங்கை அணி ஏழாவது இடம் வகிக்கிறது. இதில் 900 போட்டிகள் பங்கேற்று இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது.
என்ன தான் இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும் வெற்றி அணிகளுக்கான பட்டியலில் இந்திய அணி சற்று பின்னடைவே சந்தித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அதிக போட்டிகள் விளையாடிய அவுஸ்திரேலியா அணியே முதல் இடத்தில் உள்ளது.
இந்த அணி 888 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 547 வெற்றிகளை குவித்துள்ளது. இந்த அணியின் சராசரி வெற்றி 64.42 ஆகும். தென் ஆப்ரிக்க அணி (564 போட்டி 348 வெற்றி, 64.05 ) இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி (866 போட்டி, 457 வெற்றி, 54.36) 3-வது இடத்திலும், இந்திய அணி (900 போட்டி, 455 வெற்றி, 53.25) 4 வது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் மேற்கிந்திய தீவு அணியும், ஆறாவது இடத்தில் இங்கிலாந்து அணியும், ஏழாவது இடத்தில் 777 போட்டிகள் விளையாடியுள்ள இலங்கை அணி 365 வெற்றிகள், 373 தோல்விகள், 5 போட்டிகள் டிராவிலும், 34 போட்டிகள் முடிவில்லாமலும் போயுள்ளது.
Related posts:
|
|