ஒருநாள் தொடர் – தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணி வெற்றி!

Saturday, March 30th, 2019

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: