ஒருநாள் தொடரில் சந்திமலுக்கு இடமில்லை !

fsdfsd Thursday, December 7th, 2017

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து சந்திமல் நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு அணிகளுக்குமிடையில் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த பின்னரர் மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

மூன்று ஆட்டங்களும் முறையே எதிர் வரும் 10,13,17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணியிலிருந்து சந்திமல் நீக்கப்பட்டார். திசர பெரேரா(தலைவர்), உபுல் தரங்க, குணதிலக, டிக்வெல்ல(இலக்கு காப்பாளர்), சமரவிக்கரம, திரிமன்னே, குணரத்ன, சதுரங்க டிசில்வா, பதிரன, தனஞ்சய, வண்டர்சே, சமீர, லக்மல், பிரதீப்.