ஒருநாள் தொடரில் இருந்து மாலிங்க நீக்கம்?

Thursday, October 5th, 2017

பாகிஸ்தானுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பங்கேற்க மாட்டார் தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறாயினும், இந்த போட்டித்தொடரில் இருந்து தன்னை நீக்குமாறு மாலிங்க கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக்குழுவால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அஞ்சலோ மத்திவ்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.உபாதை உள்ளாகியுள்ள மத்திவ்ஸ் இதுவரையில் குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த வருடங்களில் மத்திவ்ஸ் இழக்கும் மூன்றாது முழு டெஸ்ட் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: