ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி – இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, August 15th, 2019

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டி 35 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.

இதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் 72 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

Related posts: