ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலில் இங்கிலாந்து முதலிடம்!

Monday, January 23rd, 2023

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின் படி இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

அந்த தரப்படுத்தலுக்கமைய, நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தையும், இந்திய அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அவுஸ்திரேலிய அணி நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் சர்வதேச அணிகளின் தரப்படுத்தலின் படி இலங்கை அணி எட்டாம் இடத்தை பிடித்துள்ளது

Related posts: