ஒருநாள் இந்திய அணி அறிவிப்பு!

Friday, October 7th, 2016

நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் வழக்கமாக இடம்பெறும் ரோஹித், ரஹானே, கோஹ்லி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தவிர, ஹார்டிக் பாண்ட்யா, சுரேஷ் ரெய்னா, அக்சர் படேல், ஜெயண்ட் யாதவ், மிஸ்ரா, மந்தீப் சிங் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.

இந்திய ஒருநாள் அணி

டோனி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, ரஹானே, கோஹ்லி, மணீஷ் பாண்டே, ரெய்னா, ஹார்டிக் பாண்டியா, அக்சர் படேல், ஜெயண்ட் யாதவ், அமித் மிஸ்ரா, பும்ரா, குல்கரனி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கெடர் ஜாதவ்.

2038

Related posts: