ஒருநாள் அணிகளில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக அஷ்வின் ஆதங்கம்!
Monday, March 18th, 2019ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிக்கான அணியில் தெரிவு செய்யப்படாத நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களின் தேவை இருப்பதால் தனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்;
‘அனைவரும் நினைக்கும் அளவிற்கு ஒருநாள் போட்டியில் என்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் தற்போது அணிக்கு தேவைப்படுவதால் தான் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017ல் விளையாடிய போட்டியில் நான் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன். என்னுடைய முந்தைய ஆட்டங்களை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு. அதை வைத்து பார்க்கும் போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தெரிவு செய்யப்படவில்லை.
அதற்கும் என்னுடைய ஆட்டத்திறனிற்கும் சம்பந்தமில்லை. மேலும் நான் எந்த ஒரு தனிப் பிரிவு கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தவில்லை’ என தெரிவித்துள்ளார்.
மேலும் தான் அணியில் இருந்து நீக்கப்படும் பல சூழ்நிலைகளில் இருந்து டோனி தன்னை காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|