ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பேன் – சந்திக்க ஹத்துருசிங்க!

Tuesday, July 9th, 2019

தனது ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை அணி நாடு திரும்பியது.

இதன் பின் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் சந்திக்க ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் முகைமையாளர் அசந்த டி மெல் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.