ஒட்டுசுட்டான் ம.வி மாணவனுக்கு 5ஆயிரம் மீற்றரில் வெண்கலம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பு.ஜெனந்தன் 5000 மீற்றர் ஓட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அகில அலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற 19வயதுக்குட்பட்ட ஆண்களிற்கான 5000மீற்றர் ஓட்டத்தில் மேற்படி மாணவன் 16.37 நிமிடங்களில் ஓடி முடித்து வெண்கல பதக்கத்தை சுவீகரித்தார். முல்லைத்வுதீ வலயத்திற்கு கிடைத்த ஒரே ஒரு பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரங்கன ஹெராத்தின் ஆசை நிறைவேறுமா?
மோசடியில் வீரர்களுக்கும் தொடர்பா?
ஐ.பி.எல் தொடர் - CSK அணியில் விளையாடிய மதீஷ பத்திரன விலகல்!
|
|