ஐ.பி.எல். வரலாற்றில் புது உலக சாதனை படைத்த வீரர்!

Thursday, April 13th, 2017

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகப்படியான ஸ்டிரைக் ரேட் வைத்து புது சாதனை படைத்துள்ளார் கிறிஸ் மோரீஸ்.

டி20 போட்டிகளில் வீரரின் துடுப்பாட்ட சராசரியைவிட, ஸ்டிரைக் ரேட்தான் மிக முக்கியமானது. 100 பந்துகளை சந்தித்தால் எத்தனை ஓட்டங்களை இந்த வீரர் சேகரிக்க முடியும் என்பதை வைத்துதான் ஸ்டிரைக் ரேட் முடிவாகிறது. இந்த வகையில் டோனியின் ஸ்டிரைக் ரேட் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 65 என்ற அளவில் உள்ளது.

ஆனால், டெல்லி வீரர் கிறிஸ் மோரீசோ டோனிக்கு நேர் எதிராக விளசி வருகிறார். புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 9 பந்துகளில் இவர் 38 ஓட்டங்களை விளாசினார்.

எனவே ஸ்டிரைக் ரேட் 422.22 என்ற அளவில் இருந்தது. அதாவது ஒரு பந்துக்கு 4 ஓட்டங்கள் என்ற வீதத்தில் விளாசியுள்ளார் கிறிஸ் மோரிஸ்.

முன்னதாக சென்னை அணிக்காக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்க்கல் 2012 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக 7 பந்துகளில் 28 ஓட்டங்கள் விளாசி, 400.00 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருந்ததுதான் ஐபிஎல் சாதனையாக இருந்தது. தற்போது சக நாட்டு மோரீஸ் இச்சாதனையை விஞ்சியுள்ளார்.

நேற்றைய போட்டியின்போது மோரீஸ் 6வது வீரராக களம்புகுந்தார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களை இவர் விளாசி, புனே அணிக்கு கிலியை ஏற்படுத்தினார்.

ஆடம் ஜம்பாவின் பந்தில் பவுண்டரி அடித்து ஆரம்பித்த இவரது இன்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்து நிறைவு பெற்றது.

Related posts: