ஐ.பி.எல்.: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி சிறப்பான வெற்றி!

Monday, November 2nd, 2020

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 54ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணி சார்பில், சுப்மான் கில் 36 ஓட்டங்களையும் நிதிஷ் ரணா ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், திரிபத்தி 39 ஓட்டங்களையும் நரேன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் டிவெட்டியா 3 விக்கெட்டுகளையும், கார்திக் டியாகி 2 விக்கெட்டுகளையும், ஜொப்ரா ஆர்செர் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி சார்பில், ரொபின் உத்தப்பா 6 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 18 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 4 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 1 ஓட்டத்தினையும், ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், சிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கமலேஷ் நாகர்கோடி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பெட் கம்மின்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துக் கொண்டது. ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

Related posts: