ஐ.பி.எல் தொடர்: யூசுப் பதான் அதிரடியில் பெங்களூரை வென்றது கொல்கத்தா!

Tuesday, May 3rd, 2016
பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
9வது ஐ.பி.எல் தொடரின் 30வது போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்து 52 ஓட்டங்களும், கிறிஸ் கெய்ல் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி அரைசதம் கடந்து 52 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் 4 ஓட்டங்களும், ஷேன் வாட்சன் 34 ஓட்டங்களும், சச்சின் பேபி, ஸ்டுவர்ட் பின்னி தலா 16 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் மோர்னே மோர்கல், பியூஸ் சாவ்லா தலா 2 விக்கெட்டும், ஆண்ட்ரு ரஸ்ஸல், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 186 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அணித்தலைவர் கம்பீர் 37 ஓட்டங்களும், கிறிஸ் லைன் 15 ஓட்டங்களும், ஆண்ட்ரு ரஸ்ஸல் 39 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் யூசுப் பதான் அரைசதம் கடந்து 60 ஓட்டங்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் பெங்களூர் அணியின் யுஸ்வேந்திரா சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார். கொல்கத்தா அணியின் ஆண்ட்ரு ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்

Related posts: