ஐ.பி.எல் தொடர்:  ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்!

Monday, May 21st, 2018

ஐ.பி.எல் போட்டியின் ப்ளேஓப் சுற்றுக்கான நான்கு அணிகளும் தெரிவாகியுள்ளன.

இதன்படி, சன்ரைசஸ் ஹைதராபாத், சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று இடம்பெற்ற 55 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகள் மோதின.இதில், டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 4 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய, மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதேவேளை, 56 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து, 153 ஓட்டங்களை பெற்றது.

பதலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.இந்த நிலையில், நாளைய தினம் ப்ளேஓப் சுற்றுப் போட்டி இடம்பெறவுள்ளது.

Related posts: