ஐ.பி.எல் தொடர்: பிளே ஆப்பின் கடைசி இரண்டு இடத்துக்காக போடும் 5 அணிகள்!

Wednesday, May 16th, 2018

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஹைதராபாத், சென்னை அணிகள் முன்னேறி விட்ட நிலையில், அடுத்த இரண்டு அணிகள் எது என்பதில் தான் தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஏனெனில் இதில் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு என ஐந்து அணிகள் உள்ளன. ஆனால் இதில் இரண்டு அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதால், இனி வரும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

அந்த வகையில் இதில் இருக்கும் அணிகளில் எந்த அணி எப்படி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு வெற்றி பெறும் என்பதை பற்றி பார்ப்போம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

முதல் 9 போட்டிகளில் 3 வெற்றி பெற்றிருந்த இந்த அணி, அதன் பின் பட்லரை துவக்க வீரராக இறக்கியவுடன் விஸ்வரூபம் எடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

தற்போது வரை 6 போட்டிகளில் வென்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு இரண்டே போட்டிகள் மீதம் உள்ளது. அதில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு எந்த வித பிரச்சனையுமின்றி தகுதி பெற்றுவிடும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

முதலில் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்த அணி, தற்பொழுது அடுத்த 6 போட்டிகளில் 1-ல் மட்டுமே வென்றுள்ளது.

இந்தணியும் மிதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வென்றுவிட்டால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் மற்ற அணியுடன் டை ௲ பிரேக்கில் சிக்கிக் கொள்ளும்.

அதுமட்டுமின்றி நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்ததால் பஞ்சாப் அணியின் ரன் ரேட் மிக மோசமாக உள்ளது. இதனால் அந்தணி இரண்டு போட்டியிலும் கட்டாயம் வென்றாக வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ்

தற்போது வரை 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி வரும், புதன் கிழமை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் மும்பை வெளியேறிவிடும்.

அதே சமயம் இந்தணிக்கும் பஞ்சாப் போட்டியை சேர்த்து இரண்டு போட்டிகள் உள்ளதால், இரண்டிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் டை ௲ ப்ரேக்கரில் இந்த அணி அதிக ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஒரு முறை கூட சாம்பியன் ஆகாத பெங்களூரு அணிக்கு கோஹ்லி இந்த முறை நிச்சயம் கோப்பை வாங்கித் தருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தணி தற்போது வரை 10 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் 7-வது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி மற்றும் கொல்கத்தா அல்லது ராஜஸ்தான் தங்களின் மீதம் உள்ள போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் பெங்களூரு அணி வெளியேறிவிடும்.

பெங்களூரு அணி அடுத்த இரு போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளுடன் டை ௲ பிரேக்கில் அதிக ரன் ரேட் வாயிலாக தகுதி பெற முடியும்.

அதே போல் ஒரு தோல்வி, வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ரன் ரேட் வாயிலாக செல்லவும் வாய்ப்புள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தற்போது வரை 12 போட்டிகளில் 6 வென்றுள்ள கொல்கத்தா அணி, தன்னுடைய அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் எளிமையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். எனினும் ஒரு வெற்றியுடன் மட்டுமே குவாலிய் ஆக முடியாது ஏன் என்றால் ரன் ரேட் மைனசில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: