ஐ.பி.எல் தொடர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தியது டோனி அணி!

Sunday, April 10th, 2016

ஐபிஎல் போட்டிகளின் 9வது சீசன் மும்பையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி துடுப்பெடுத்தாடியது. அறிமுக அணியான புனேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி தடுமாறியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 45 ஓட்டங்களும் ராயுடு 22 ஓட்டங்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 121 ஓட்டங்களை எடுத்தது.

புனே தரப்பில் இஷாந்தசர்மா மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே விளையாடியது. துவக்க வீரர்களாக இறங்கிய ரகானே மற்றும் டூ பிளசிஸ் இருவரும் மும்பையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் 3 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டூபிளசிஸ் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பீட்டர்சன் ரகானேவுடன் சேர்ந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இருவரின் அதிரடியால் 14.4 ஓவர்களில் 126 ஓட்டங்கள் எடுத்து புனே முதல் வெற்றியை பெற்றது. ரகானே 66 ஓட்டங்களுடனும், பீட்டர்சன் 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

Related posts: