ஐ.பி.எல்.தொடர்: தோனியை வீழ்த்திய ரெய்னா!

Friday, April 15th, 2016

9ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-ஆவது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் சுரேஷ் குஜராத் லயன்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்ற புனே அணியின் தலைவர் தோனி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை குவித்தது. புனே அணியில் அதிகபட்சமாக டூ பிளஸிஸ் 69 ஓட்டங்களும் பீட்டர்சன் 37ஓட்டங்களும் எடுத்தனர்.

இதையடுத்து 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடியது. ஆரோன் பின்ச் மற்றும் மெக்கல்லம் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு குஜராத் லயன்ஸ் அணி 83 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பின்ச் ஆட்டமிழந்தார்.

பின்னர் மெக்கல்லம் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா 24 ஓட்டங்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் பிராவோவின் அதிரடி காரணமாக 18 ஓவர்களில் புனே அணி வெற்றி இலக்கை எட்டியது. புனேவின் ஆரோன் பிஞ்சு ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: