ஐ.பி.எல்  தொடர் –  டெல்லி அணியை துவம்சம் செய்து கொல்கத்தா !

Monday, April 11th, 2016
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதியுள்ளன. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி துடுப்பெடுத்தாடியுள்ளது.
இதனையடுத்து ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அகர்வால்(9) மற்றும் டி கொக் (17) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற ஆரம்பத்திலேயே டெல்லி அணிஓட்டங்கள் குவிக்க திணறியது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிராத்வைட் (6) மற்றும் சஞ்சு சாம்ஸன்(15) ஆகியோர் டெல்லி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் எவரும் குறிப்பிடத்தக்கவகையில் அணிக்கு வலு சேர்க்க தவறியதால் அந்த அணி 17.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
கொல்கத்தா அணி சர்பாக அபாரமாக பந்து வீசிய றஸ்ஸல் (3) ஹோக்(3) மற்றும் ஹாஸ்டிங், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 99 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியகொல்கத்தா அணியின் அரம்ப ஆட்டக்காரர்கள் ரொபின் உத்தப்பா மற்றும் அணித்தலைவர் கௌதம்கம்பீர் ஆகியோர் டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
33 பந்துகளில் 35 ஓட்டங்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு நல்லஆரம்பத்தை  ஏற்படுத்திய ரொபின் உத்தப்பா மிஷ்ரா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து கௌதம் கம்பீருடன் சேர்ந்த பாண்டே கொல்கத்தாஅணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
14.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களைகுவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.
24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை சாய்த்தறஸ்ஸல் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: