ஐ.பி.எல் தொடர்: கைவிடப்பட்ட 49வது போட்டி !
Wednesday, May 1st, 2019இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற 49வது போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
இந்த போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளூர் ஆகிய அணிகள் மோதின.
பெங்குளூரில் இடம்பெற்ற இந்த போட்டியில், ஆரம்ப முதலே மழை பெய்தமை காரணமாக போட்டி 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய ரோயல் செலன்ஜர்ஸ் பெங்குளூர் அணி 5 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 7 பந்துகளில் 25 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை இழந்து 41 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்தநிலையில், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Related posts:
|
|