ஐ.பி.எல். தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுளைந்தது குஜராத் !

Sunday, May 22nd, 2016

குஜராத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

குறித்த வெற்றியின் மூலம் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி பிளே ஓப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

குஜராத் லயன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கான்பூரில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணியின் அணித்தலைவர் ரெய்னா பந்து வீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் அணித்தலைவர் ரோகித் சர்மா 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3வது நபராக களமிறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 63 ஓட்டங்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்தவர்களில் பட்லரை (33) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர் 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் ஆரோன் பிஞ்ச், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள்.

முதல் ஓவரின் 2வது பந்தில் பிஞ்ச் வெளியேறினார். அடுத்து மெக்கல்லத்துடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். குஜராத் அணி 9.2 ஓவரில் 96 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது மெக்கல்லம் வெளியேறினார். அவர் 27 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 48 ஓட்டங்கள் குவித்தார்.

3வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். ரெய்னா 30 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வெயின் ஸ்மித் களமிறங்கினார்.

ரெய்னா 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஓட்டங்களில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

வெயின்ஸ் மித் அதிரடியாக விளையாட குஜராத் அணி 17.5 ஓவரில் வெற்றியிலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் 14 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 7 வெற்றியுடன் மும்பை அணி ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியது

625.0.560.350.160.300.053.800.668.160.90 (3) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

Related posts: