ஐ.பி.எல். ஏலத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு!

12ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது.
அணி நிர்வாகங்கள் சார்பில் பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த முறை ஏலத்தின் மூலம் 70 வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 70 இடத்திற்கு மொத்தம் 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் புதிதாக விளையாடும் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஜோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், புதுச்சேரி மற்றும் பீகார் ஆகிய அணிகளை சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இறுதிப்பட்டியலை வருகிற 10ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த முறை ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் பிரபலமான ஹூக் எட்மிடெஸ் என்பவர் ஐ.பி.எல். ஏலத்தை நடத்த இருக்கிறார்.
Related posts:
|
|