ஐ.பி.எல்லில் விளையாடும் திறமை இலங்கையருக்கு இல்லை-முரளிதரன் !

27-1469607769-muttiah-muralitharan43 Thursday, April 13th, 2017

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான திறமையுள்ள இலங்கை வீரர்கள் தற்போது இல்லை என இலங்கை அணியின் முன்னாள் வீர்ர முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன் அளித்த பேட்டியில், தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில ஆடுமளவுக்கு திறமை கொண்ட வீரர்கள் இலங்கையில் இல்லை.

ஐ.பி.எல்லில் அவுஸ்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்த திறமையான வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்த தரத்துக்கு தற்போது இலங்கை வீரர்கள் யாரும் இல்லை. இலங்கையின் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

தற்போதைய வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றால் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய விளையாட முடியும் என கூறியுள்ளார்.

மேலும் டி20 போட்டிகளை தான் இளைஞர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர் எனவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.