ஐ.சி.சி.யின் தரவரிசையில் இடம்பிடித்தவர்கள் இவர்கள்தான்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 897 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் வீராட் கோஹ்லி 886 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி முதல் முறையாக 2வது இடத்தை பிடித்துள்ளார்.
அத்தோடு விராத் கோஹ்லி டி20 போட்டிகளுக்கான தரத்தில் முதலிடத்திலும், ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் 2வது இடத்திலும் உள்ளார். முன்னாள் நட்சத்திரங்கள் கவாஸ்கர், சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோரின் சாதனைகள் பலவற்றையும் கோஹ்லி தகர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஷ்வின் 904 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளார். 867 புள்ளிகளுடன் ரங்கன ஹேரத் இரண்டாம் இடத்தையும், 844 புள்ளிகளுடன் டேல் ஸ்டெயின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
Related posts:
|
|