ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வெற்றி!

Friday, February 17th, 2017

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் தகுதிகாண் போட்டி ஒன்றில் இலங்கை மகளிர் அணி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

கொழும்பு என் சி சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கட்டுக்களினால் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணியை இலங்கை மகளிர் கிரிக்கட் அணி தோற்கடித்துள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 47.4 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களினால் வெற்றியை பதிவுசெய்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

20328icc-women-cricket

Related posts: