ஐ.சி.சியிலிருந்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்!

Friday, July 19th, 2019

சர்வதேச கிரிக்கட் பேரவையில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசியல்தலையீடுகள் உள்ளிட்ட விடயங்களின் ஊடாக சர்வதேச கிரிக்கட் சபையின் யாப்பினை மீறிய செயற்பாடுகள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.